விரைவில் மாறப்போகிறது தமிழக அமைச்சரவை: உருள போகும் 2 மந்திரிகளின் தலை

விரைவில் மாறப்போகிறது தமிழக அமைச்சரவை: உருள போகும் 2 மந்திரிகளின் தலை
X

அமைச்சரவை மாற்றத்திற்கான சிந்தனையில் முதல்வர் முக ஸ்டாலின்.

Tamil Nadu cabinet to change soon, Heads of 2 ministers to roll

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருக்கிறது இரண்டு மந்திரிகள் தலை உருள போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் 3 ஆண்டுகள் தனது பணியை நிறைவேற்றி உள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், அதனை தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆகிய அனைத்திலும் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதற்கு காரணம் திமுகவின் கூட்டணி பலம் தான். அதிமுக பிளவு பட்டு இருப்பது மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேராமல் தனித்தனியாக இருப்பதும் ஒரு காரணமாகும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க அடுத்து வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக இதே பலத்துடன் கூட்டணி அமைத்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இப்போதே தேர்தல் பணிகளை திமுகவினர் தொடங்கி விட்டனர். துணை முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்படும் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி ஒவ்வொரு மாவட்ட வாரியாக சென்று ஆய்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறார். மேலும் காலை உணவு திட்டம் விரிவாக்கம், மாணவர்களுக்கு தவப்புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களையும் நாளுக்கு நாள் அறிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக திமுக பலமாக இருப்பது தெரிகிறது.

இந்த நிலையில் இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதி வருகிறார்கள்.

துணை முதல்வராக இல்லை என்றாலும் அமைச்சராக இருந்து கொண்டு துணை முதல்வருக்கான அதிகாரத்துடன் வலம் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சரவை மாற்றத்தின்போது அவர் அதிகாரப்பூர்வமாக துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கூட அவர் மழுப்பலுடன் தான் பதில் அளித்துள்ளாரே தவிர உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படாது என உறுதியாக மறுக்கவில்லை. எனவே உதயநிதி துணை முதல்வராவது உறுதியாகி விட்டது.

அத்துடன் தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் இன்னொருவர் செல்வாக்காக வலம் வரும் முக்கிய நபர். இவர் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த இரண்டு மந்திரிகளையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக வட்டாரத்தில் இந்த பேச்சு தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி, மருமகன் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் பெண் காவலர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பதிவு செய்திருந்த செய்தியின் எதிரொலியாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டு உள்ளார். முதல்வரின் குடும்பத்தினர் தொடர்பாக முக்கிய மந்திரி பல தகவல்களைபரிமாறி இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இது தொடர்பான செல்போன் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாகவே செல்வாக்கான மந்திரி பதவி இழப்பார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil