காங்கிரசுக்கு சாதகமாக காங்கிரஸ் எடுத்த சர்வே: மகிழ்ச்சியில் இந்தியா கூட்டணி

காங்கிரசுக்கு சாதகமாக காங்கிரஸ் எடுத்த சர்வே: மகிழ்ச்சியில் இந்தியா கூட்டணி
காங்கிரசுக்கு சாதகமாக காங்கிரஸ் எடுத்த சர்வே முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தேர்தல் ஆலோசகர் ஒருவர் மூலம் நடத்திய சர்வே ஒன்றின் முடிவை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

மொத்த இடங்கள்: 543 பாஜக கூட்டணி: 366 இந்தியா கூட்டணி: 104 மற்றவை: 73

மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதுபோக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ: - பாஜக: 1 - திமுகவின் இந்தியா கூட்டணி - 36 - அதிமுக: 2

தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சர்வே: இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசு தனது தனிப்பட்ட உளவுத்துறை மூலம் சர்வே நடத்தி வருகின்றன. அதேபோல் மத்திய அரசும் உளவுத்துறை மூலம் இன்னொரு சர்வே நடத்தும். இப்படி சர்வேக்களுக்கு இடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தேர்தல் ஆலோசகர் ஒருவர் மூலம் நடத்திய சர்வே ஒன்றின் முடிவை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அந்த கட்சியில் தற்போது முக்கிய பொறுப்பு + ஆலோசகராக இருக்கும் அவர் தீவிரமாக சர்வே ஒன்றை நடத்தி உள்ளாராம்.

அதில் நாடு முழுக்க 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று முடிவு வந்துள்ளதாம். சில இடங்களில் பாஜக எம்பிகளுக்கு எதிரான நிலை உள்ளது. முறையாக சீட் பகிர்ந்து, கூட்டணிகளை இறுதி செய்தால் பல மாற்றங்கள் நடக்கும். முக்கியமாக காங்கிரஸ் வேட்பாளர்களை சரியாக தேர்வு செய்தால் கூடுதலாக 20 இடங்களை வெல்லும் வாய்ப்புகளும் உள்ளன. அதாவது அதிகபட்சம் 170 இடங்கள் வரை கூட காங்கிரசுக்கு வாய்ப்புகள் உள்ளதாக உட்கட்சி சர்வே சொல்கிறதாம். அதாவது எல்லாம் முறையாக நடந்தால், கடந்த முறையை விட 120- 130 இடங்களை காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாக உட்கட்சி சர்வே சொல்கிறதாம்.

காங்கிரஸ் கட்சி எடுத்த இந்த சர்வே முடிவுகள் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story