சு வெங்கடேசன் வெற்றி! அதிமுகவுக்கு 3வது இடம்...!

சு வெங்கடேசன் வெற்றி! அதிமுகவுக்கு 3வது இடம்...!
X
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் வெற்றிக்கனியைப் பறித்துள்ளார். அவர் 161263 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றிக்கான சான்றிதழைப் பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வரை பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 295 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 231 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை தொகுதிகள் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று ஜூன் 4ம் தேதி இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார். மீதமுள்ள 542 தொகுதிகளில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்தி மாநில கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என மிகத் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன. அதேநேரம் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று நிலைமை மாறி வருகிறது.

தமிழகத்தில் பாஜக மீண்டும் மண்ணைக் கவ்வியிருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் நல்ல ஆதரவைப் பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் தற்போதைய மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் மீண்டும் வெற்றிக்கு அருகில் நெருங்கியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, சு வெங்கடேசன் 166526 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் பாஜகவின் ராம ஸ்ரீநிவாசன் இருக்கிறார்.

அதிமுகவின் சரவணன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 168780 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு