ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி த.மா.கா தலைவராக கே.டி. தனபால் நியமனம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தமாகா தலைவர் கே.டி. தனபால்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதாயின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. அக்கட்சியின் தலைவராக ஜி.கே. வாசன் உள்ளார். கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கத்திலும் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை கட்சியின் தலைவர் ஜிகே வாசன் நியமித்து வருகிறார்.
சிறிய சட்டமன்ற தொகுதிகள் என்றால் இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு தலைவர், துணைத்தலைவர் ,பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளும், பெரிய சட்டமன்ற தொகுதி என்றால் தொகுதிக்கு ஒரு தலைவர் மற்றும் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தமாகா தலைவராக திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த கே.டி. தனபால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே கட்சியில் பல பொறுப்புகளில் இருந்து பணியாற்றி வருகிறார். மேலும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் அறங்காவலராகவும் பதவி வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.டி. தனபால் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மேலும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu