லஞ்ச ஒழிப்பு விசாரணை : கலக்கத்தில் எஸ்.பி.வேலுமணி நெருக்க அதிகாரிகள்
முன்னாள் உள்ளாட்சித்துறை மந்திரி எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புபிரிவு வழக்குபதிவு செய்து அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த அவர் தென்காசி பகுதிக்கு சென்று வந்திருக்கிறார்.
தென்காசி பகுதிக்கு வந்து செல்ல பின்னணி காரணம் பற்றி விசாரித்தோம். பல அதிர்ச்சியான தகவல் வந்தது. தென்மாவட்டத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர் தற்போது கோபி செட்டிபாளையம் நகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவர் எந்த நேரமும் விசாரணை வளையத்திற்குள் வரலாம் என்ற நடுக்கத்தில் உள்ளார்.
அதேபோல, தென்காசி நகராட்சியில் உள்ள முக்கிய அலுவலர் கலக்கத்தில் உள்ளார். ஏற்கனவே தென் மாவட்டத்தில் பணிபுரிந்து வால்பாறை நகராட்சி கமிசனராக இருந்த பவுன்ராஜ் தீவிரமான எஸ்பி வேலுமணியின் ஆதரவாளராக இருந்து முறை கேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. அதுபோல் தம் மீதும் வழக்கு பாயலாம் எனகருதிய அதிகாரிகள் தன செல்வாக்கால் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தை விட்டு பணிமாறுதலில் ஓட்டம் பிடிக்கின்றனர்.
தென்மாவட்டம் குறிப்பாக தென்காசி ஏன் என்று கேட்டதற்கு அதிர்ச்சியாக இருந்தது. தென்மாவட்டத்தில் பினாமிகள் பெயரில் நிலம் வாங்க பிண்ணனியில் இருந்த உதவி கமிஷனர் ஈரோடு மாவட்டத்திற்கும், நகரமைப்பு அலுவலர் தென்காசிக்கும் பணிமாறுதலில் தனது செல்வாக்கை பயன்படுத்தி சென்று விட்டனர்.
உள்ளாட்சி ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடு செய்து பணம் குவிக்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயலாம். அதிகாரிகளை ஒருங்கிணைத்து அனைவரையும் தென்காசி மாவட்டம் கோவிந்தபேரியில் இருக்கும் பண்ணை தோட்டத்திற்கு வரவழைத்து மாத வசூலை செய்து கொடுத்த அமைச்சருக்கு நெருக்கமான இரு அதிகாரிகள் உட்பட பலரும் கலக்கத்தில் உள்ளனர். பணிமாற்றத்தில் சென்றாலும் விசாரணையின் பிடியில் சிக்கிவிடுவோம் என தெரிந்துள்ளதால் அதை சரிகட்டும் முயற்சியை தொடங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்பு பிரிவின் பிடியில் சிக்குவது உறுதி என்கிறார்கள் இவர்களின் செயல்பாட்டை நன்கு அறிந்தவர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu