சிங்கிள் டிஜிட் சீட் தான்: மேற்கு வங்கத்தில் காங்கிரசை கதற விடும் மம்தா பானர்ஜி

சிங்கிள் டிஜிட் சீட் தான்: மேற்கு வங்கத்தில் காங்கிரசை கதற விடும் மம்தா பானர்ஜி
X

மம்தா பானர்ஜி.

சிங்கிள் டிஜிட் சீட் தான் மேற்கு வங்கத்தில் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி காங்கிரசை கதற விட்டுக்கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட்டில் தான் சீட் வழங்க மம்தா பானர்ஜி திட்டமிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியாக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி சார்பாக 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் கூட போட்டியிடலாம். ஆனால் மாநிலங்களில் மாநில கட்சிகள்தான் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும். மாநில கட்சிகள் கொடுக்கும் இடங்களை காங்கிரஸ் வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். மேற்கு வங்கம் என்றால் திரிணாமுல் காங்கிரஸ்தான் கூட்டணிக்கு தலைமை, உ.பி.யில் என்றால் சமாஜ்வாதி கட்சிதான் தலைமை என்கிற புரிதல் காங்கிரஸுக்கு வர வேண்டும் என்றார்.

அத்துடன் லோக்சபா தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லை. ஆகையால் டிசம்பர் 31-ந் தேதிக்குள் முக்கிய மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை உடனே முடித்துவிட வேண்டும் எனவும் மமதா பானர்ஜி பொரிந்து தள்ளிவிட்டார். காங்கிரஸ் கட்சியோ வாய் பேச முடியாத நிலையில் ஜனவரி 2-வது வாரத்துக்குள் அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிடலாம் என கூறியிருக்கிறது. இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிக மிக அதிகபட்சமாக 2 தொகுதிகளைத்தான் தர முடியும். இதனை காங்கிரஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என அதிரடி காட்டி இருக்கிறார் மமதா பானர்ஜி. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 6 முதல் 8 தொகுதிகளை எதிர்பார்ப்பதாக பதில் தந்துள்ளது. அதெல்லாம் முடியவே முடியாது. 2 சீட்டை வாங்கிக் கொண்டு போட்டியிட்டு ஜெயிக்க முடியுமான்னு வழியை பாருங்க என கறார் காட்டிவிட்டாராம் மம்தா பானர்ஜி.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகளோ மேற்கு வங்கத்தில் ஒரு போதும் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவே முடியாது என கூறி வருகின்றனர். இதனால் பேசாமல் இடதுசாரிகளுடன் இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிடலாமா எனவும் காங்கிரஸ் ஆலோசிக்கிறதாம். இதனால் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் "இந்தியா" கூட்டணி இருக்குமா? உடையுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தி.மு.க .தான் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை தி.மு.க. வழங்கியது. நடைபெற உள்ள தேர்தலில் 15 சீட்கள் வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் தி.மு.க. தலைமையோ சமீபத்தில் நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதால் சிங்கிள் டிஜிட்டில் தான் சீட் வழங்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த சூழலில் தான் மேற்கு வங்க மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை கதற விட்டுக்கொண்டிருக்கிறார் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்