மநீம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்: அதிர்ச்சியில் கமல்!

மநீம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்: அதிர்ச்சியில் கமல்!
X
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, அதன் தலைமை நிலைய மாநில செயலர் பொறுப்பு வகித்த இ.சரத்பாபு விலகியுள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல் மீது குற்றம்சாட்டி, அதன் நிர்வாகிகள் சிலர் விலகி வருகின்றனர். கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி பத்மபிரியா, தலைமை நிலைய பொதுச்செயலராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு போன்றோர் வெளியேறினர்.

தற்போது, கட்சியின் தலைமை நிலையச் செயலராக இருந்த இ.சரத்பாபு விலகி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

ஜனநாயக ரீதியாக கட்டமைக்கப்பட்ட, ஓர் அரசியல் அமைப்பான மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும், தலைவர் கமல்ஹாசன் மீதான நம்பிக்கையோடும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இணைந்து தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தேன்.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தேன். இந்த இரு உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது.

அதன் பிறகு தலைவரின் ஈடுபாடு கட்சியில் வெகுவாகக் குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டு போய் சேர்க்க முடியாது என்ற நிலையில், இக்கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மக்கள் நீதிமய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது, கட்சித் தலைவரான கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சினிமா வெளியீட்டில் பிஸியாக இருக்கும் அவர், தற்போது இதுகுறித்தும் ஆலோசானையில் ஈடுபட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself