எஸ்.சி. எஸ்.டி.க்கு என தனி வங்கி: வி.சி.க. தேர்தல் அறிக்கையில் தகவல்

எஸ்.சி. எஸ்.டி.க்கு என தனி வங்கி: வி.சி.க. தேர்தல் அறிக்கையில் தகவல்

விசிக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய தொல் திருமாவளவன்.

எஸ்.சி. எஸ்.டி.க்கு என தனி வங்கி அமைக்கப்படும் என வி.சி.க. தேர்தல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டுக்கு தனி கொடி அனுமதிக்கப்பட வேண்டும்; ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி-க்கு தனி வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த ஜெயங்கொண்டபட்டினத்தில் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

விசிக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் உயர்ஜாதி ஏழைகளுக்கான பத்து சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும்

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் பதவி வகிப்பதை மாற்ற வேண்டும்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். தமிழ்நாட்டுக்கான தனி கொடியை அனுமதிக்க வேண்டும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என தனியாக வங்கி உருவாக்க வேண்டும்

அம்பேத்கர் பிறந்த நாளை அறிவுத் திருநாளாக அங்கீகரிக்க வேண்டும் தேர்தல் ஆணையர்கள் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் வகுப்புவாத, பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்

அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள் மொழிபெயர்ப்பு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மாநிலங்களுக்கு உரிய நிதிப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் விசிக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

Tags

Next Story