செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்ப்பு!

செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்ப்பு!
X
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவந்த நிலையில் பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார். இந்நிலையில் இலாகா இல்லா அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்த நிலையில், அதற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself