மணிப்பூர் மாநில ஆளுநராக பிஜேபியின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்

மணிப்பூர் மாநில ஆளுநராக பிஜேபியின்  மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்
X

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழக பிஜேபியின் மூத்த தலைவர் இல கணேசன்.

தமிழக பிஜேபியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான இல. கணேசன் பா.ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவித் மணிப்பூர் ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 தேதி லட்சுமி ராகவன் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டு முழுநேரச் செயல்பாட்டாளராகப் பொதுவாழ்விற்கு வந்தார்.

இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறு படிப்படியாக உழைத்து பா.ஜ.கவில் உயர்ந்தவர், அதிர்ந்து பேசாத நற் பண்பு உள்ளவர் என்று அனைத்து கட்சியினராலும் பாராட்ட படுபவர் இல.கணேசன் என்பது குறிப்பிட தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!