பாஜக காக்கா கூட்டம்: செல்லூர் ராஜூ பதிலடி வலுக்கும் அதிமுக-பாஜக லடாய்

பாஜக காக்கா கூட்டம்: செல்லூர் ராஜூ பதிலடி வலுக்கும் அதிமுக-பாஜக லடாய்
X
பதவிக்காக அண்ணாமலை பணியில் வேகம் காட்டுகிறார்; பாஜக ஒரு காக்கா கூட்டம் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக, மதுரையில் இன்று அவர் அளித்த பேட்டி: அதிமுக இன்று எழுச்சியாக இருக்கிறது. திமுகவுக்கு ஓட்டு போட்டதற்காக மக்கள் தான் இன்று வருத்தப்படுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி, எங்கேயோ ஒரு இடத்தில் கூட்டம் போட்டு, அங்கு 5 ஆயிரம் பேரை, 10 ஆயிரம் பேரை திரட்டுவதில் பயனில்லை. எங்களுக்கு எல்லா இடத்திற்கும் கூட்டம். இது காக்க கூட்டம் இல்லை... கொள்கை கூட்டம். காக்கா கூட்டங்கள், இரைகள் போட்டா கூடும். இரை முடிந்ததும் பறந்துவிடும்.

அரசியல் கட்சிகளுக்கும் சவால் விடுறேன். அதிமுக எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலை சந்திக்க தயார் என்று சொல்ல தயார். மற்ற கட்சிகள் இதை அறிவிக்க தயாரா? திமுக தயாரா? இதை எனது கருத்தாக எடுத்துக் கொள்ளாமல், அதிமுகவின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளலாம்.

பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியை வளர்க்க அரசியல் செய்கிறார். வேல் பிடித்ததால் முருகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது; தமிழிசை வந்தார் சிறப்பாக பணியாற்றியதால், அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அது போல, தனக்கும் ஒரு பதவி வேண்டி, பணியில் அண்ணாமலை வேகம் காட்டுகிறார். எங்கள் மீது துரும்பு வீசினால், தூணை கொண்டு நாங்கள் வீசுவோம். இவ்வாறு செல்லூ ராஜூ தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!