சத்தியம் தொலைக்காட்சி நிலையம் தாக்குதல் - எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

சத்தியம் தொலைக்காட்சி நிலையம் தாக்குதல் - எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்
X

எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக்

சத்தியம் தொலைக்காட்சி நிலையம் மீது வன்முறை தாக்குதல்-எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை

சத்தியம் தொலைக்காட்சி நிலையம் மீது வன்முறை தாக்குதல்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னை ராயபுரத்தில் உள்ள சத்தியம் செய்தி தொலைக்காட்சி நிலையத்தில் நுழைந்த மர்ம மனிதன் ஒருவர், கூரிய வாளுடன் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி விலை உயர்ந்த பொருட்களை சேதப்படுத்தியும், ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருவரை தாக்கவும் முயன்றுள்ளார்.இந்த செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

வட மாநிலங்களில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீது நிகழும் இதுபோன்ற தாக்குதல்கள் இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு இத்தகைய செயல்களை துவக்கத்திலேயே இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். தாக்குதலின் பின்புலத்தில் உள்ள தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!