ஓ.பன்னீர்செல்வம் உண்மையை கூறியுள்ளார்: சசிகலா கருத்து

கோப்பு படம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் முன்பு நேற்று ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது, சசிகலா மீது தனிப்பட்ட முறையில் தற்போது மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அத்துடன், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த சதி திட்டமும் தீட்டவில்லை. ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் கருத்துக்கு இன்று சசிகலா பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், கடவுளுக்கு தெரிந்த உண்மை, மக்களுக்கும் தெரிந்துள்ளது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. உண்மை காலதாமதமாக மக்களுக்கு தெரியலாம் ஆனால் திரையிட்டு மறைக்க முடியாது.
அதிமுகவில், தொண்டர்கள்தான் ஆணிவேர் என எம்ஜிஆர் அதிமுக சட்டத்தை வகுத்துள்ளார். ஏதோ நூறுபேர் பதவியில் இருந்துகொண்டு கருத்து தெரிவிப்பதால் அந்தக் கருத்தை ஏற்க முடியாது. சின்னம்மா மீது மரியாதை மதிப்பு எப்பொழுதும் உண்டு என்று ஓபிஎஸ் தற்போது உண்மையை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu