ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய சசிகலா, கையை பிடித்து, கதறி அழுத பன்னீர் செல்வம்

ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய சசிகலா, கையை பிடித்து,  கதறி அழுத பன்னீர் செல்வம்
X
மனைவியை இழந்து வாடும் ஓபிஎஸ்க்க சசிகலா ஆறுதல் கூறினார்.
ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவியின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். சசிகலாவை பார்த்தவுடன் ஓபிஎஸ் உடைந்து அழுதார்.

​அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார். சென்னை பெருங்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பால் இறந்தார்.

அவருக்கு வயது (63) இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி விஜயலட்சுமி ஒரு வாரகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இன்று காலை அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார்.

இது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஓபிஎஸ் மனைவியின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவியின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஓ. பன்னீர் செல்வத்தின் அருகில் அமர்ந்து அவரிடம் துக்கம் விசாரித்தார்.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் தன்னை அறியாமல் கண் கலங்கினார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தையும் சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!