ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம்

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம்
X
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றதால் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைகள் செயலாளர் இல்லாமல் நடந்த நிலையில் புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதன்படி, 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில், புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!