திமிர் பிடித்தவர்களை தடுத்து நிறுத்திய ராமர்: பாஜக மீது ஆர்எஸ்எஸ் தலைவர் சாடல்
ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார்
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் மந்தமான செயல்பாட்டிற்கு "திமிர்த்தனம்" காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கூறியதால், பாஜக அதன் சித்தாந்த வழிகாட்டியின் விமர்சனத்தை எதிர்கொண்டது.
ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திரேஷ் குமார், "ராமரின் மீது பக்தி செய்தவர்கள் படிப்படியாக திமிர் கொள்ள ஆரம்பித்தனர். அந்தக் கட்சி மிகப்பெரிய கட்சியாக அறிவிக்கப்பட்டது, ஆனால் ஆணவத்தால் ராமரால் 241 இல் தடுத்து நிறுத்தப்பட்டது" என்றார்.
மக்களவை தேர்தலில் 240 இடங்களை வென்றாலும் , பெரும்பான்மையை பெறத்தவறிய பாஜகவை நோக்கியே இந்த கருத்து உள்ளது . இது 2014-க்குப் பிறகு கட்சியின் மிக மோசமான செயல்பாடாகும்.
இந்திரேஷ் குமார் எதிர்க்கட்சியான இண்டியா அணியையும் குறிவைத்து அவர்கள் "ராமருக்கு எதிரானவர்கள்" என்று முத்திரை குத்தினார்,
எதிர்க்கட்சிக் கூட்டணியின் பெயரைக் குறிப்பிடாமல், "ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஒன்றாக சேர்ந்தும் 234 இல் நிறுத்தப்பட்டனர். கடவுளின் நீதி உண்மை மற்றும் மகிழ்ச்சிக்குரியது" என்று அவர் கூறினார். மக்களவைத் தேர்தலில் இண்டியாஅணி 234 இடங்களைக் கைப்பற்றியது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பொதுச் சேவையில் பணிவின் முக்கியத்துவத்தைப் போதித்த சில நாட்களுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்து வந்துள்ளது .
பகவத் கூறுகையில் "ஒரு உண்மையான சேவகர் கண்ணியத்தைப் பேணுகிறார். அவர் வேலை செய்யும் போது நல்லொழுக்கத்தை பின்பற்றுகிறார். 'நான் இந்த வேலையைச் செய்தேன்' என்று சொல்லும் கர்வம் அவருக்கு இல்லை. அந்த நபரை மட்டுமே உண்மையான சேவகர் என்று அழைக்க முடியும் ." என்று கூறினார்
அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளை மேற்கோள் காட்டி, அனைவரிடமும் அடக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் அவசியத்தையும் பகவத் வலியுறுத்தினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu