கோவையில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்

கோவையில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்
X
கோவையில் வருகிற 12ம் தேதி ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வரும் 12-ந் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். கோவையில் நடைபெறும் திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

லோக்சபா தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் அனலடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தி உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரையிலான கருத்து கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணியே 30-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 6 முறை பிரசாரத்துக்கு வந்து சென்றுள்ளார். பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வருகை தர உள்ளார். சென்னையில் ரோடு ஷோ மூலம் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார். இதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தமிழ்நாட்டில் வரும் 12-ந் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இன்று வயநாடு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து வரும் 12-ந் தேதி தமிழ்நாடு வருகை தரும் ராகுல் காந்தி, நெல்லை மற்றும் கோவையில் பிரசாரம் செய்கிறார். கோவையில் திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டம் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார். இத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யவில்லை.

Tags

Next Story