பாஜக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல் வெளியீடு! விருதுநகரில் ராதிகா போட்டி

பாஜக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல் வெளியீடு! விருதுநகரில் ராதிகா போட்டி
X

ராதிகா சரத்குமார் 

15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமாக 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதனையடுத்து, மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியான நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் (தனி) - பாலகணபதி

வட சென்னை - பால் கனகராஜ்

திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

திருப்பூர் - முருகானந்தம்

பொள்ளாச்சி - வசந்தராஜன்

கரூர் - செந்தில்நாதன்

சிதம்பரம் (தனி) - கார்த்தியாயினி

நாகப்பட்டினம் (தனி) - எஸ்.ஜி.எம்.ரமேஷ்

தஞ்சாவூர் - எம்.முருகானந்தம்

சிவகங்கை - தேவநாதன் யாதவ்

மதுரை - ராம சீனிவாசன்

விருதுநகர் - ராதிகா சரத்குமார்

தென்காசி - ஜான் பாண்டியன்

புதுச்சேரி - நமச்சிவாயம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!