மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து அகில இந்திய வேலைநிறுத்தம் எதற்காக?

மத்திய அரசு ஏராளமான சட்டத்திருத்தங்கள்செய்துள்ளதை கண்டித்து இன்று மார்ச் 28 மற்றும் நாளை 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் எதற்காக?
மத்திய மோடி அரசு 44 வகை தொழிலாளர் சட்டங்களை 4 வகை தொகுப்பாக மாற்றியது. அதில் முக்கியமாக (Highlights) செய்த மாற்றங்கள். 100 தொழிலாளர்கள் பணிபுரியும் ஒரு நிறுவனத்தை கதவடைப்பு (or) மூடுவதற்கு (lock out) தொழிலாளர் துறையின் அனுமதி தேவையில்லை என்பதை 300 தொழிலாளியாக மாற்றியது.
ஒரு நிறுவனம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டால் 7 வருடத்திற்கு போனஸ் தர வேண்டியது இல்லை. மேலும் போனசிலும் அபராதம் பிடிக்கலாம். இதுவரை சம்பளத்தில் மட்டும்தான் தொழிலாளியின் தண்டனைக்காக.அபராதம் பிடிக்கலாம் என சம்பள பட்டுவாடா சட்டம் 1936 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fixed Term Employment என்று சொல்லி நிரந்தரத்தன்மையுள்ள வேலைகளைச் குறைத்து Casual, Apprentice ஆகவே வைத்துக்கொள்ளலாம்.
அதே போல 8 மணிநேர என்பது கிடையாது. 8 மணி நேரத்திற்குமேல் 12 மணிநேரம் வரை அதாவது நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற்றுத்தான் வெளியே செல்லவேண்டும்
மேலும் சமீபத்தில் வெளியான ராணுவ உற்பத்தி தொடர்பான சட்டத் திருத்தத்தில் தொழிலாளி கூடுதல் வேலை செய்யவில்லை எனில் அது வேலைநிறுத்தமாக கருதப்படும்.
ஒரு நிறுவனம் அங்கீகரிக்காத தொழிற்சங்கத்துக்கு நிதி கொடுத்தாலே அது சட்டவிரோதமாகும்.
இனிமேல் 7 பேர் வைத்துக்கொண்டு தொழிற்சங்கம் அமைக்க முடியாது. தொழிற்சங்க பதிவை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் உரிமை. தொழிலாளர் துறையில் தொழிலாளர் ஆய்வாளர் (Inspector of Labour) போன்ற பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டு விட்டது.
14வயதுக்குட்டவர்கள் குழந்தை தொழிலாளர்கள் என்ற சட்டம் நீக்கம் செய்யப்பட்டது.
மோட்டார் வாகனச் சட்டத்திருந்தத்தில் நடத்துனர் என்ற கேட்டகிரிநீக்கம் செய்யப்பட்டுவிட்டது.
இனிமேல் விபத்துக்கு நஷ்ட ஈடாக காப்பீட்டு நிறுவனங்கள் அதிகபட்சம் ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது போன்று மத்திய அரசு ஏராளமான சட்டத்திருத்தங்கள் செய்துள்ளது. இது போன்ற 44 வகை தொழிலாளர் நலச்சட்டங்களை 4 வகைதொகுப்பாக மாற்றியதை கண்டித்தும்,
பொதுத்துறையை அடிமாட்டு விலைக்கு விற்பதை கண்டித்தும்
இன்னும் இது போன்ற தொழிலாளர் விரோதப் போக்குகளை கண்டித்தும், மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்தும் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu