பெட்ரோல் வரி குறைப்பு: மத்திய அரசு மீது தமிழக நிதியமைச்சர் பாய்ச்சல்

பெட்ரோல் வரி குறைப்பு: மத்திய அரசு மீது தமிழக நிதியமைச்சர் பாய்ச்சல்
X

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், இது குறித்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்திய வரியை, நேற்று அதிரடியாக குறைத்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 9.50 காசு, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தபோது, சில மாநிலங்கள் உள்ளூர் வரியை குறைக்கவில்லை; எனவே, இப்போதாவது அவற்றை குறைத்து மக்களுக்கு உதவ வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இச்சூழலில், மத்திய அரசின் கருத்து குறித்து, தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: மாநிலங்களின் கருத்தை கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. 2014 ஆம் ஆண்டில் இருந்து பெட்ரோல் ரூ. 23 (250%), டீசல் ரூ.29 (900 %) என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 50 சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி மத்திய அரசு வலியுறுத்துகிறது. இதுதான் கூட்டாட்சியா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil