பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மே 14ல் வேட்பு மனு தாக்கல்

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மே 14ல் வேட்பு மனு தாக்கல்
X

பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மே 14ல் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி மே 14-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தற்போது வரை 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.

பிரதமர் மோடி போட்டியிடும் உ.பி. வாரணாசி லோக்சபா தொகுதியில் இறுதி கட்டமாக ஜூன் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி (பாஜக), அஜய் ராய் (காங்கிரஸ்), ஏபிஹெச்எம் மகாமண்டலேஸ்வர் ஹேமங்கி சகி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மே 13-ந் தேதியன்று ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மே 14-ந் தேதி வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். வாரணாசி தொகுதியானது 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. 1967-ல் சிபிஎம் கட்சி வென்றது. 1971-ல் காங்கிரஸ், 1977-ல் ஜனதா கட்சி, 1980, 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதன்பின்னர் 1989 தேர்தலில் ஜனதா தளமும் 1991 முதல் 1999-ம் ஆண்டு வரையிலான 4 தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாகவும் வென்ற தொகுதி இது. 2004-ம் ஆண்டு காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா இத்தொகுதியில் வென்றார். 2009-ம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார். 2014-ல் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்று நாட்டின் பிரதமரானார். 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:

நரேந்திர மோடி (பாஜக) 581,022 (56.37%) அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி) 209,238(20.30%) அஜய் ராய் (காங்கிரஸ்) 75,614 (7.34%) பிரதமர் மோடி 371,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

நரேந்திர மோடி(பாஜக) 674,664 (63.62%) ஷாலினி யாதவ் (சமாஜ்வாதி கட்சி) 195,159 (18.40%) அஜய் ராய் (காங்கிரஸ் 152,548 (14.38%) பிரதமர் மோடி 479,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2024-ம் ஆண்டு தற்போதைய தேர்தலில் காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா