இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த பிரதமர்மோடி

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் மோடி தொலைபேசியில் நன்றி தெரிவிப்பு.
தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி. பிரதமர் மோடியின் சட்டங்களை நினைத்து அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா பாராட்டியிருந்தார்
புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, 'அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற நுாலுக்கு, இளையராஜா அணிந்துரை எழுதிஉள்ளார். அதில், 'மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள், திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்' என கூறியதோடு, அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு பாராட்டி இருந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க.,வினரும், அவர்களது ஆதரவாளர்களும், இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கடிதம் எழுதி இருந்தார்.இளையராஜாவை விமர்சிப்பது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,வினருக்கு தடை விதித்துள்ளார். ஆனாலும், இளையராஜா மீதான கடும் விமர்சனத்தை, தி.மு.க., ஆதரவாளர்கள் தொடர்கின்றனர்.
இந்நிலையில், இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அம்பேத்கர் குறித்தும், அவரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருவது குறித்தும், பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார். இந்நிலையில், இளையராஜா பாராட்டியதால், மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu