கர்நாடக அரசியலை கலக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம்
பிரஜ்வல் ரேவண்ணா.
3,000 ஆபாச வீடியோக்கள் தொடர்பான எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 300 பெண்களை நாசமாக்கி 3,000-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்திருந்தார். இந்த வீடியோக்கள் அவரது ஓட்டுநர் கார்த்திக் மூலம் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த வீடியோக்களை வைத்து ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என உள்ளூர் பாஜகவினர் மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பினர். ஆனாலும் ஜேடிஎஸ்- பாஜக கூட்டணி அமைந்தது.
இந்த நிலையில் ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவுக்கு முன்னதாக பென் டிரைவ்கள் மூலம் 3,000-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் பரவின. ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் இந்த் ஆபாச வீடியோக்கள் கர்நாடகாவை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது தொடர்பாக எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டே தப்பி ஓடிவிட்டார். தற்போது பிரஜ்வல் வீடியோக்களை வெளியிட்டது யார்? பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு தப்பி ஓடவிட்டது யார்? என சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிரஜ்வல் ரேவண்ணா எம்பி என்பதால் வழங்கப்பட்ட தூதரக பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே ஹாசனில் முகாமிட்டுள்ள எஸ்.ஐ.டி. அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்து வருகின்றனர். சில பெண்கள், எங்களை விசாரித்தால் தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
இதனிடையே சமூக வலைதளப் பக்கங்களில் தம் மீது எந்த தவறும் இல்லை என பிரஜ்வல் ரேவண்ணா நேற்று பதிவிட்டிருந்தார். அத்துடன் அவரது வழக்கறிஞர் போலீசார் முன்னிலையில் ஆஜராகி, ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளா பிரஜ்வல். இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் தர வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் இதனை எஸ்.ஐ.டி ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu