கரூரில் அருள்நிதிக்கு 'இளைய கலைஞர்' என்ற புதிய பட்டத்துடன் போஸ்டர்கள்
அருள்நிதி பிறந்தநாள் ஜூலை 21-ம் தேதி(நாளை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் சிலர் கரூரில், 'இளைய கலைஞர்' என்ற புதிய பட்டத்துடன் போஸ்டர்களை ஒட்டியிருந்தாய்ங்க. இப்ப வரை இதுக்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் தமிழகமெங்கும் இந்த அடைமொழியுடன் தன் போஸ்டரை ஒட்ட அருள்நிதி உத்தரவிட்டிருக்காராம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அழகிரி, ஸ்டாலினுக்குப் பிறகு பிறந்தவர் மு.க.தமிழரசு. அழகிரியையும், ஸ்டாலினையும் அரசியலில் ஈடுபடுத்திய கருணாநிதி, தமிழரசுவை அரசியலில் ஈடுபட அனுமதிக்கவில்லை.
அருள்நிதியும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 2010-ம் ஆண்டு வெளியான 'வம்சம்' படம் மூலம் சினிமாத்துறைக்கு அடியெடுத்து வைத்தார் என்றாலும், 2015-ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலணி' படம் மூலம் அனைவருக்கும் தெரிந்த நடிகரானார். இதுவரை 12 படங்களில் நடித்திருக்கிறார். இவரது பிறந்தநாள் ஜூலை 21-ம் தேதி(நாளை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் சிலர் கரூரில், 'இளைய கலைஞர்' என்ற புதிய பட்டத்துடன் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் ஒருமுறை தி.மு.க போராட்டம் அறிவித்தபோது, கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் திடலில் போராட்டத்தை நடத்தினார் அருள்நிதி. அப்போதே, 'நான் அரசியல் குடும்பத்தில் இருப்பவன்' என்று சொன்னார். அதுமட்டுமின்றி, அருள்நிதியும் கருணாநிதியின் பேரன்களில் ஒருவர்தான். அதனால்தான், 'இளைய கலைஞர்' என்ற பட்டத்தைக் கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துக் கூறி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் கரூர் நண்பர்கள்
ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் எல்லாமே என்பதுபோல 'மூன்றாம் கலைஞர்' என்ற அடைமொழியுடன் அவரை அழைக்கிறார்கள். சில அமைச்சர்கள் அவரது படத்தையும் தங்களது சேம்பரில் மாட்டிவைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu