முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார்-குடியரசுத் தலைவர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார்-குடியரசுத் தலைவர்
X
சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 -ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார். கருணாநிதி படத்திறப்பு விழாவில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!