திமுக இரட்டை குதிரையில் சவாரி - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது! சசிகலா ஒரு சுதந்திரப் பறவை! ஜெயக்குமார் விமர்சனம்!
திமுக இரட்டை குதிரையில் சவாரி செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக இரட்டை குதிரையில் சவாரி செய்து வருவதை அறிந்ததால் தான், டெல்லியில் நடைபெற்ற அறிவாலய திறப்பு விழாவுக்கு ராகுல்காந்தி வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தினமும் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திடுவது ஸ்கூலுக்கு போவது போல் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.நிபந்தனை ஜாமினில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
ஜனநாயக நாட்டில் அடக்குமுறை எதற்குமே தீர்வாகாது என்றும் தனது விவகாரத்தில் திமுக அரசு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று எனவும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். வட சென்னையில் குறிப்பாக ராயபுரம் பகுதியில் அதிமுகவை எழுச்சியுடன் வலிமையாக வைத்துக் கொள்ளும் விதமாக தாம் நாள்தோறும் கையெழுத்திட வருவதாகவும் இனி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் திமுகவை விட அதிமுக 10% வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெயக்குமார் விமர்சனம்மேலும், காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தவறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இதுவரை துபாய், டெல்லி என சுற்றுப்பயணம் செய்தவர் இனி மன்னிப்பு கேட்கும் பயணம் செல்ல வேண்டும் எனவும் முதல்வரை விமர்சித்தார் ஜெயக்குமார்.
தினமும் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திடுவது நாள் தவறாமல் ஸ்கூலுக்கு போவது போல் உள்ளதாக கூறி அந்த இடத்தை கலகலப்பாக்கினார்.
இரட்டை சவாரிதிமுகவை பொறுத்தவரை இரட்டை குதிரையில் ஒரே நேரத்தில் சவாரி செய்து வருவதாகவும் இது குறித்து அறிந்ததால் தான் டெல்லியில் நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழாவை ராகுல்காந்தி புறக்கணித்துவிட்டார் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தற்போது பாஜகவுடன் திமுக இணக்கமாக செல்லத் தொடங்கியிருப்பதாக கூறிய ஜெயக்குமார், ராகுல்காந்தி டெல்லியில் நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு என்ன காரணம் என வினவினார். நிபந்தனை ஜாமின்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை நிபந்தனை ஜாமினில் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாலும் கூட, செய்தியாளர்களை கண்டால் சலிக்காமல் நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் தமது மனதில் தோன்றிய கருத்துக்களையும் வெளிப்படுத்தும் வழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu