2024 லோக்சபா தேர்தல் :திமுக கூட்டணியில் பாமக, மநீம, தேமுதிக சேர்க்க திட்டம்?
தேசிய முற்போக்குதிராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (கோப்பு படம்)
pmk,mnm,dmdmk will join dmk alliance
2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக் சபா தேர்தல் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள்நீதிமய்யம், தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் ஆகிய கட்சிகளைதன்னோடு சேர்த்துக்கொண்டால் பாஜவை எளிதில் வீழ்த்திவிடுவதோடு 2019 ம் ஆண்டு போல 39 தொகுதிகளையும் மீண்டும் திமுக வசம் தக்கவைத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் வரும் 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியோடு ஆட்சியைப் பிடித்தது.காங்கிரசுக்கு சொற்ப இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்துவரும் பாஜ மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது.
pmk,mnm,dmdmk will join dmk alliance
சென்னையில் உள்ள திமுக கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் (கோப்பு படம்)
pmk,mnm,dmdmk will join dmk alliance
பாஜ ஹாட்ரிக் சாதனை ?
2024 ம்ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் இதற்கான முக்கிய வேலைகளை இப்போதிருந்தே துவங்கிவிட்டன.கடந்த 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சி செய்து வருகிறது. அதாவது 2014 மற்றும் 2019 ம்ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. எப்படியாவது ஹாட்ரிக் சாதனை அடித்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கங்கணம் கட்டியுள்ளது.
இதற்காகவே நேருகுடும்பத்தில் உள்ளவர்கள் எவரும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்காமல் கர்நாடகவைச் சேர்ந்த எம்.பி.மல்லிகார்ஜீன் கார்கேவை தலைவராக நியமித்துள்ளனர். காரணம் காங்கிரஸ் கட்சியில் சோனியாவின் இந்த இருபெரும் தோல்வியால்கட்சியின்மூத்ததலைவர்கள் பலர்விரக்தியடைந்துள்ளனர். மீண்டும் பாஜ ஆட்சி வந்துவிட்டால் காங்கிரசுக்கு இந்தியாவில் மதிப்பு இருக்குமா? எனவே எப்படியாவது இம்முறை பாஜ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக புதுப்புது வியூகங்களை எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி அமைத்து வருகின்றன.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...என்பது போல் தமிழகத்தினைப் பொறுத்தவரை கடந்த 2019 ல் எதிர்க்கட்சியாக இருந்த திமுக 39 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜ எவ்வளவோ முயற்சித்தும் தமிழகத்தில் அதனுடைய பாச்சா பலிக்கவில்லை. வடமாநிலத்தில் பாஜ பல இடங்களில் அமோக வெற்றியினைப் பெற்றது. கடந்த லோக் சபா தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி சேர்ந்தும் அதிமுக ஒருஇடத்தில் கூட வெற்றி பெறவேஇல்லை.
pmk,mnm,dmdmk will join dmk alliance
பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (கோப்பு படம்)
pmk,mnm,dmdmk will join dmk alliance
வடமாநிலத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வி
கடந்த 2019 ம் ஆண்டு நடந்த லோக் சபாதேர்தலில் உ.பியில் சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ் ஆகியவை ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தும் அங்கு பாஜதான் வெற்றிபெற்றது. எனவே வரும் 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில்உ.பியின் 80 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் ஆகிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவுக்கு எதிராக களம் இறங்க தேவையான ஆயத்த நடவடிக்கைகளை சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை48 ஆகும். தேசியவாதகாங்கிரஸ் கட்சியின்தலைவர் சரத்பவார் தலைமையில் காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜவை எதிர்க்க களமிறங்க சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.
pmk,mnm,dmdmk will join dmk alliance
சென்னையில் உள்ள நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஆபீசின் தோற்றம் (கோப்பு படம்)
pmk,mnm,dmdmk will join dmk alliance
பீகார்
பீகாரில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 40 ஆகும். இங்கு ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இவைகள் அனைத்தும் பாஜவை எதிர்த்து போட்டியிட களமிறங்கும் என தெரிகிறது.
தமிழகம்
கடந்த 2019ம்ஆண்டு லோக்சபா தேர்தலிலேயே தமிழகத்தில் எப்படியாவது அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜ முயற்சி செய்தது. இருப்பினும் அப்போது திமுக எதிர்க்கட்சியாகவும் ,பாஜவை எதிர்த்தும் களமிறங்கி தேர்தலை சந்தித்து மோடி எதிர்ப்பு அலையால்39 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.
தற்போது 2024 ம் ஆண்டு நடக்கும் தேர்தலின்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதாலும். பல கருத்துக் கணிப்புகள் திமுக குறைந்த இடங்களையே பெறும் என சொல்லியுள்ளதாலும் மோடிக்கு எதிரான அலை இல்லாததாலும், திமுக கூட்டணியில் மாற்றத்தினை செய்ய விரும்புவதோடு திட்டமிட்டும் வருகிறது.
pmk,mnm,dmdmk will join dmk alliance
மக்கள் நீதி மய்யக் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின் போது (கோப்பு படம்)
pmk,mnm,dmdmk will join dmk alliance
கூட்டணியில் பாமக, மநீம, தேமுதிக
திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளோடு மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளான பாமக, மநீம, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொண்டால் இன்னும் சற்று வலிமை அதிகரிப்பதோடு வெற்றி பெறுவதும் எளிதுஎன திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களாகவே மநீம தலைவர் கமலஹாசன் திமுகவோடு ஒன்றியிருப்பதால் இதன் கூட்டணியானது உறுதி செய்யப்பட்டது போல்தான். எம்.பி ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஆகியோருடன் அமைச்சர் துரைமுருகன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது லோக்சபா தேர்தலைப்பற்றிபேசியதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் கட்சியினைப்பொறுத்தவரை அழைத்து பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஓகே என்றால் ஓகேதான். அதிக கட்சிகள் இருப்பதால் திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டால் கூட்டணியில் ஓகே. இல்லாவிட்டால் கஷ்டந்தான் எனவும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவிப்பதாக தெரிகிறது.
அதிமுக கோஷ்டி பூசல்
அதிமுக தற்போது இருபிரிவுகளாக இருப்பதால் இது பாஜவோடு கூட்டணி சேர்ந்தாலும் சற்றும் பிரயோஜனப்படாது .இதனை எண்ணிய பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் திமுகவோடு கரம் கோர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப்பூசலை முற்றிலும் ஒழிக்க அகில இந்திய கட்சித்தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே முயற்சி செய்து வருகிறார். மேலும் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நாடுமுழுவதிலும் மக்களிடையே
நேரிடையாக சென்று ஆதரவு திரட்டும் வகையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் இம்முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனையும் மீறி மோடியே ஹாட்ரிக் வெற்றி பெற்று பிரதமர் ஆகிவிட்டால் நம்மிடம் கூடுதல் தொகுதிகள்இருந்தால்தான் நிலைமை சரிவரும் என முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது. எனவே கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்க்கும் பட்சத்தில் ஏற்கனவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்.,கம்யூ கட்சிகளுக்கான தொகுதிகளில் கணிசமாக குறைய வாய்ப்பு உண்டு எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu