சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு
X
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, எம்.பி. அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதற்கு முன்னதாக முதலமைச்சரை சந்தித்தார்.

இச்சந்திப்பில் அன்புமணி தலைமையில் 7 பேர் குழு பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனரை். வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார்

வன்னியர் இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு செய்தியாளர்களிடம் பேசும் போது வன்னியர் இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்திட கூடுதல் புள்ளி விவரங்களை திரட்டி புதிய சட்டத்தை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும். இதை ஒரு வாரத்திலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துவிட முடியும். இதை அவர் விரைந்து செய்து முடிப்பார் என ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும் எதிர்பார்த்து கிடக்கிறது என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture