சென்னை வந்தார் பிரதமர் மோடி! கவர்னர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

சென்னை வந்தார் பிரதமர் மோடி! கவர்னர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
X

பிரதமரை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி 

ஒருநாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு சென்னைக்கு வந்தடைந்தார்.

ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமரை, விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு பிரதமரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன் பின்னர், அங்கிருந்து காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் நோக்கி பிரதமரின் கார் புறப்பட்டது. வழி நெடுகிலும் பாஜக் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு பிரதமருக்கு வரவேற்பு தந்தனர். பொதுமக்களை நோக்கி, காரில் இருந்தவாறே பிரதமர் கை அசைத்து வரவேற்பை ஏற்றார். கலை நிகழ்ச்சிகள், மேளதாளம் முழங்க பூக்கள் தூவி பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பாரம்பரிய் முறையில் அளிக்கப்பட்ட வரவேற்பால் மகிழ்ந்த பிரதமர் மோடி, ஒரு கட்டத்தில் காரில் இருந்து வெளியே இறங்கினார். காத்திருந்த மக்களை நோக்கி கை அசைத்தார். தமிழக பாஜக சார்பில், பிரதமருக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா