பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை
X

சுப்பரீம் கோர்ட் (பைல் படம்)

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. பெகாசஸ் தொடர்பாக பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வருகிறது. அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் மனுக்களை உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரிக்கிறது.

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரிக்கும், என்.எஸ்.ஓ., குழுமம் நிறுவனத்தில் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதம் மற்றும் கொடூர குற்றங்களை தடுப்பதற்காகவே பல நாடுகளுக்கு எங்கள் மென்பொருளை விற்பனை செய்கிறோம்.

இந்த மென்பொருளை ஒரு நாட்டின் அரசு குறிப்பிடும் விசாரணை அமைப்பு களுக்கு மட்டுமே தருகிறோம். எங்கள் செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானவை.பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையில்லை. இஸ்ரேல் அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது பொய்யான செய்தி என்பது, விசாரணையில் தெரியவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!