/* */

கட்சிக்கு விசுவாசம் முக்கியம்: திமுக எம்பி க்களுக்கு ஸ்டாலின் கட்டளை

கட்சிக்கு விசுவாசம் முக்கியம் என திமுக எம்பி க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

கட்சிக்கு விசுவாசம் முக்கியம்: திமுக எம்பி க்களுக்கு ஸ்டாலின் கட்டளை
X

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கட்சிக்கு மிகவும் உண்மையான விசுவாசத்துடன் இருக்கும்படி திமுக எம்பி க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் ௩௯ தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அந்த வகையில் திமுக வேட்பாளர்கள் மட்டும் 22 பேர் தற்போது உள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் அனைவரும் பங்கேற்றனர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கடந்த லோக்சபா தேர்தலில் தவறவிட்ட ஒரு தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளையும் வெற்றி பெற்றுள்ளோம் இதற்காக கட்சியினருக்கும் இணைந்து பணியாற்றிய கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பது/

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என்று கோவையில் 14ஆம் தேதி முப்பெரும் விழா நடத்தப்படும். பார்லிமென்ட் வளாகத்தில் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலைகளை அகற்றிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. உடனடியாக அவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் எனக் கூறுவது,

தமிழக நல திட்டங்கள், நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஐ என் டி ஏ கூட்டணியினருடன் ஒருங்கிணைந்து பார்லிமெண்டில் திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி சர்ச்சை கிளம்பியுள்ளது. இனியும் இந்த மோசடித்தனமான தேர்வு முறை ஆகவே கூடாது. இதை முழுமையாக விளக்க வேண்டும். அல்லது நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பார்லிமென்ட் பாதுகாப்பு பணியில் பார்லிமென்ட் பாதுகாப்பு படையை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-

வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் வாய்ப்பு அளித்த கட்சிக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கும் மிக மிக உண்மையாக இருங்கள். பலவீனமான பாஜக அரசை நம்முடைய முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கிறது. எனவே எம்பிக்களின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் மதிப்பிட முடியாத பொறுப்பு உங்களுக்கு வந்திருக்கிறது இதை காப்பாற்றும் வகையில் பணிகளை செய்து கட்சிக்கும் எனக்கும் விசுவாசமாக இருந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 9 Jun 2024 7:42 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
 2. திருவண்ணாமலை
  அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி: அமைச்சர் பேச்சு
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 4. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 5. திருவள்ளூர்
  கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
 6. நாமக்கல்
  108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை
 9. செய்யாறு
  எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
 10. கோவை மாநகர்
  சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி