பள்ளிபாளையத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கூண்டு

பள்ளிபாளையத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கூண்டு
X

பள்ளிபாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை 

பள்ளிபாளையத்தில் முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மக்கள் பிரதிநிதி தலைவர் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் எண்ணப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொது இடத்தில் நிறுவப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளின் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைக்க உத்தரவிட்டிருந்தனர்.

இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மக்கள் பிரதிநிதிகளின் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு, சனிசந்தை பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவ சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்துறையிடம் விசாரித்த பொழுது, மேல்மட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள 3 மக்கள் பிரதிநிதி தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக தென் மாவட்டங்களில் அவ்வப்போது நிகழும் மோதலின் இடையே அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அனைத்து சிலைகளுக்கும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!