/* */

பாதயாத்திரை, சிறைத்தண்டனை, பதவி பறிப்பு: உயர்கிறதா ராகுல் செல்வாக்கு?

பாதயாத்திரை, சிறைத்தண்டனை, எம்பி பதவி பறிப்பின் மூலம் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்வதாக கணிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பாதயாத்திரை, சிறைத்தண்டனை, பதவி பறிப்பு: உயர்கிறதா ராகுல் செல்வாக்கு?
X
ராகுல் காந்தி

பாரத் ஜோடா யாத்திரை, அவதூறு வழக்கில் சிறை தண்டனை, எம்.பி. பதவி பறிப்பு போன்றவற்றால் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக அரசியல் களமாடி வருகிறார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஏற்பட்ட தொடர் தோல்விகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே மூன்றாவது முறையாக எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பது அவரது நோக்கம்.


இதற்காக அவர் புதுமையான போராட்டங்களையும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 4500 கிலோமீட்டர் தூரம் பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் சென்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட மாநில மக்களை அவர் சந்தித்து பேசியது அவருக்கு மிகுந்த உற்சாகத்தை மட்டும் இன்றி காங்கிரஸ் கட்சிக்கும் புதிய உத்வேகத்தை அளித்தது.

இந்த யாத்திரை முடிவில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அவரது பாரத் ஜோடா யாத்திரைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டின் சுற்றுப்பயணத்தின் போது இந்திய நாட்டுக்கு எதிராக பேசியதாக அவர் மீது பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் சூரத் நகரில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றியும், மோடி சமுதாயத்தினர் பற்றியும் அவதூறாக பேசியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு தற்போது இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து விடுதலை பெற ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்கான பிணைய தொகையை செலுத்தி விட்டு அவர் வெளியில் உள்ளார்.

பொதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதிகளாக அதாவது சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நபர் ஏதாவது குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ சிறைத் தண்டனை பெற்றால் அவரது எம்பி அல்லது எம்.எல்..ஏ பதவி தானாக பறிபோய்விடும் என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதியாகும்.

இந்த விதியை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற இணை செயலாளர் ராகுல் காந்தியின் எம். பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து இன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது ராகுல் காந்தி தனது எம்.பி பகுதியையும் இப்போது இழந்து விட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அவர் தற்போது எம்பி பதவியை இழந்து இருப்பது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.


இது ஒரு புறம் இருந்தாலும் அரசியல் ரீதியாக பா.ஜ.க. அரசு ராகுல் காந்தி மீது எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் அனைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளாகவே கருததப்படுகிறது. பாஜக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்துவதாக இருந்து வருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதாவது ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரையின்போது மக்களை நேரடியாக சந்தித்ததால் தென் மாநிலங்களில் அவரது செல்வாக்கு உயர்ந்தது மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் செல்வாக்கு பெற வைத்தது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் அவருக்கு பெரிய நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்த சூழலில் பா.ஜ.க அரசு அவரை அரசிய் ரீதியாக ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்து வரும் நடவடிக்ககைகள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கியிருப்பது, எம்.பி. பதவியை பறித்து இருப்பது போன்ற தொடர் நடவடிக்கைகள் அவரது செல்வாக்கை மேலும் மேலும் உயர வைத்துக் கொண்டு இருப்பதாகவே கருதுகிறார்கள். எது எப்படியோ ராகுல் காந்தி தற்போது பிரதமர் மோடிக்கு இணையாக அரசியல் ரீதியாக பேசப்படும் அளவிற்கு உயர்ந்து விட்டார் என்பதே உண்மை.

Updated On: 25 March 2023 5:43 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
 2. தொழில்நுட்பம்
  செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
 3. திருவள்ளூர்
  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
 4. கோவை மாநகர்
  தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
 5. வீடியோ
  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
 6. லைஃப்ஸ்டைல்
  'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
 7. வீடியோ
  தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
 8. லைஃப்ஸ்டைல்
  மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
 9. உலகம்
  குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு