ஓபிஎஸ் விரைவில் நீக்கம்: கே.பி.முனுசாமி

ஓபிஎஸ் விரைவில் நீக்கம்: கே.பி.முனுசாமி
X

கே பி முனுசாமி

பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் விதமாக ஓபிஎஸ் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என கே.பி.முனுசாமி கூறினார்

அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பன்னீர்செல்வத்தின் துரோகம் குறித்து பேசினார். அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் விதமாக ஓபிஎஸ் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார் என்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!