‘மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக்கண்ணீர்’- நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பேசிய காட்சி.
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தினமும் ஒரு பிரச்சினை கிளப்பி வருகிறார்கள்.இதன் காரணமாக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இன்று எட்டாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி போய் உள்ளன.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும், மணிப்பூர் விவகாரத்தில் "விவாதத்தில் இருந்து ஓடிவிடுவதாகவும்" எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க விரும்பவில்லை. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் கலைந்து சென்றன. எதிர்க்கட்சிகளின் நடத்தை வருத்தமளிக்கிறது,என்று சீதாராமன் கூறினார்.
“மணிப்பூர் அவர்களுக்கு (எதிர்க்கட்சி) ஒரு அரசியல் பிரச்சினை மட்டுமே. மணிப்பூர் விவகாரத்தில் வெறும் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் அதைப் பற்றி விவாதித்திருப்பார்கள், ”என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பேரவையின் விதி 267ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் ராஜ்யசபா திங்கட்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பகலில் நான்கு ஒத்திவைப்புகளுக்குப் பிறகு பிற்பகல் 3:30 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்திற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று தலைவர் ஜகதீப் தன்கர் கூறினார். விவாதம் தொடங்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார்.
எனினும், அமளி தொடர்ந்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu