ஹிண்டன்பர்க் எழுப்பிய விவகாரத்தை கண்மூடித்தனமாக நம்பும் எதிர்க்கட்சிகள்

ஹிண்டன்பர்க் எழுப்பிய  விவகாரத்தை கண்மூடித்தனமாக நம்பும் எதிர்க்கட்சிகள்
X
ஹிண்டன்பர்க் எழுப்பிய விவகாரத்தை கண்மூடித்தனமாக நம்பும் எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகிறார்கள்.

அதானி குழுமத்துக்கும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி அமைப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன் பர்க் நிறுவனம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு இந்திய அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பி இருக்கிறது. இதற்காக செபி அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் இந்த விவகாரத்தை பார்லிமென்ட் கூட்டு குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் நிச்சயமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டென்றால் ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டை விட அந்த குற்றச்சாட்டை அது முன்வைத்த விதம்தான். ஒருநாள் முன்னதாக நாளை ஒரு பெரிய விஷயம் நடக்கப்போகுது என்ற எச்சரிக்கையை வெளியிட்டு அதற்கு மறுநாள் அதானி குழுமத்துக்கும் செபி அமைப்புக்கும் இடையே தொடர்பு என்ற குற்றச்சாட்டை அது முன்வைத்ததில் இருந்தே அந்த நிறுவனத்தின் நோக்கத்தில் சந்தேகம் எழுகிறது.

இதே நிறுவனம் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இதே போல் ஒரு பெரிய குற்றச்சாட்டை முன் வைத்தது. அப்போது அதானி குழுமத்தின் பங்குகள் அகல பாதாளத்துக்கு சரிந்தன. அதன் பிறகு இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல அங்கு எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று தீர்ப்பு வந்தது. இப்போது அதே ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டி இருக்கிறது.

ஆனால் நல்ல விஷயம் அந்த குற்றச்சாட்டுக்கு பிறகு அதானி குழும பங்குகளின் சிறிய சரிவை தவிர அந்த நிறுவனம் முன்கூட்டியே எச்சரித்ததை போல பங்குச்சந்தையில் எந்த பெரிய வீழ்ச்சியும் நடக்கவில்லை. இதிலிருந்து பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றனர் என்பது உறுதியாகிறது.

அடுத்து குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் ஹிண்டன்பர்க் எப்படிப்பட்டது என்று ஆராய்ந்தால் குறுகிய கால பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் இந்த நிறுவனம் ஆய்வு அறிக்கை என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் மிக பிரபலமான பெரிய நிறுவனங்களில் பங்குகள் குறித்து அறிக்கை வெளியிட்டு அதனால் அந்த பங்குகளின் விலை கணிசமாக குறையும்போது அந்த பங்குகளை வாங்கி பின்னர் அந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறும் போது பெற்று லாபம் சம்பாதிப்பதை தொழிலாக கொண்டு இருக்கிறது என்பது தான் அதன் வரலாறு இருக்கிறது.

ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்றால் அந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மையில் முக்கியமானது குற்றச்சாட்டை சுமத்தியவர் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பது தான் அப்படி பார்த்தால் இந்த நண்பருக்கு நிறுவனம் என்பது அத்தனை நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனம் அல்ல என்பது அதன் கடந்த கால வரலாறுகளில் இருந்து உறுதியாகிறது.

அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு இங்கே எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் ரொம்பவே அவசரத்தனமான முயற்சி ஏற்ற அரசியல் ஆக இருக்கிறது. அதானி -செபி இடையிலான உறவு விசாரிக்கப்படட்டும்.அதில் தவறில்லை. அதற்கு முன்னதாக ஹிண்டன்பர்க் நோக்கம் குறித்தும் அதன் குற்றச்சாட்டுகளின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். அதற்கும் எதிர்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் தற்போது உள்ள அரசியல் சூழல் என்னவென்றால் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா பெரியண்ணன் பாணியில் அங்குள்ள நிறுவனங்கள் நமது நாட்டை சீண்டி பார்க்கின்றன. இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் ஹிண்டன் பர்க் போன்ற நிறுவனங்கள் ஏதாவது ஒரு குழப்பத்தை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றன. அப்படி ஏற்படுத்துவதில் ஒன்றுதான் இப்போது உள்ள குற்றச்சாட்டு. நமது நாட்டில் உள்ள பெரிய வியாதி என்ன வந்தால் ஏதோ அமெரிக்கா, இங்கிலாந்து சொல்லிவிட்டால் அதனை கண் மூடித்தனமாக நம்பிக்கொண்டு அரசியல் செய்து விடுகிறார்கள்.

வெளிநாட்டு அடிமைத்தனம் என்னும் அவர்களிடமிருந்து மாறவில்லை என்பதையே எதிர்க்கட்சிகளின் செயல்பாடு காட்டுகிறது. அது மட்டும் அல்லத நமது நாட்டின் மீது இவர்களுக்கு விசுவாசம் இல்லையா என்ற சந்தேகமும் எதிர்க்கட் சிகள் மீது பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!