வடசென்னை மக்களவை தொகுதி: தற்போதைய எம்பி சாதித்தது என்ன?

வடசென்னை மக்களவை தொகுதி: தற்போதைய எம்பி சாதித்தது என்ன?
X

வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி

வடசென்னை மக்களவை தொகுதியில் தேர்தலின் போது கலாநிதி வீரசாசாமி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?

திருவொற்றியூர், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர் (தனி), ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டது வட சென்னை மக்களவை தொகுதி.

2008ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவை தொகுதியில், ராயபுரம் துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

வட சென்னைக்குள் அடங்கிய திருவொற்றியூரிலிலும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் பல தொழிற்சாலைகள் இருப்பதால் இங்கு இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அதனுடன் காற்று மாசும் வந்தடைகிறது.

மிக குறுகிய சாலைகளையும், மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியாகவும் உள்ளது வட சென்னை. இருப்பினும் மத்திய சென்னை தென் சென்னை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை இந்த பகுதிகளில் நாம் காணமுடியாது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி திமுக சார்பில் போட்டியிட்டு 61.85% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கலாநிதி வீராசாமி 5.90 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக கூட்டணியில், தேமுதிக சார்பில் போட்டியிட்ட மோகன்ராஜ் 1.29 லட்சம் வாக்குகள் பெற்றார். முதன்முறையாக களம் கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் 1.03 லட்சம் வாக்குகளை பெற்றது.

தேர்தலின் போது, கலாநிதி வீராசாமி அளித்த முக்கியமான வாக்குறுதியான கொடுங்கையூர் குப்பைமேட்டை அகற்றி சீரமைக்கப்படும் என்பதை நிறைவேற்றவில்லை. தற்போதுதான் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்திற்கு செல்லும் மணலி சாலை திருவொற்றியூர் சந்திப்புக்கு கடல் வழியாக மேம்பாலம் கட்டும் பணியையும் செய்து தரவில்லை. அதேபோல ராயபுரம் ரயில் நிலையத்தை மும்முனை ரயில் நிலையமாக மாற்றி தரும் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

எண்ணூரில் இருந்து துறைமுகம் செல்லும் பறக்கும் சாலை அமைத்தல் மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்ததல் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் கலாநிதி வீராசாமி நிறைவேற்றவில்லை.

அதேநேரத்தில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் 141 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைத்து கொடுத்து பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசின் நிதி உதவியோடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் 98 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை துவங்க ஒப்புதல் பெற்றுள்ளார்.

இதே போல மக்களவையில் 290 வினாக்கள் கேள்வி எழுப்பியும் 56 விவாதங்களில் பங்கேற்றம் கலாநிதி வீராசாமி பேசி உள்ளார். மூன்று தனிநபர் மசோதாக்களையும் கொண்டு வந்துள்ளார் கலாநிதி வீராசாமி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!