மாநிலங்களில் வாரிசு அரசியல் வேண்டாம்: காங்கிரஸ் தலைமைக்கு நிர்வாகி கடிதம்

மாநிலங்களில் வாரிசு அரசியல் வேண்டாம்: காங்கிரஸ் தலைமைக்கு நிர்வாகி கடிதம்
X

தமிழக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன்.

மாநிலங்களில் வாரிசு அரசியல் வேண்டாம் என காங்கிரஸ் தலைமைக்கு திருச்சி நிர்வாகி கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.

இந்திய அளவில் பல கட்சிகளிலும் வாரிசு அரசியல் தான் நிலவி வருகிறது. தமிழகத்திலும் இதே நிலை தான். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தின் போது வாரிசு அரசியல் மற்றும் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பேசி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியிலும் அகில இந்திய அளவில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என வாரிசு அரசியல் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் எம் சரவணன் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நமது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்பது அகில இந்திய தலைமைக்கு விதிவிலக்காகும் என்பது சரி.

ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல தலைவர்கள் உள்ளனர் இவர்களுக்கும் இவர்களுடைய குடும்பத்திற்கும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தொடர்ந்து கொடுத்தால் அந்தந்த மாநிலத்தில் உள்ள உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கட்சி வளர்ச்சி என்பது தொண்டர்களிடையே ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது.

எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைவர்களின் குடும்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் இருந்தால் அதே குடும்பத்தில் உள்ளவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக காங்கிரஸின் தொண்டர்களின் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனவே அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதில் தலையிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்/

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!