நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
X
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த டாக்டர் நக்கீரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம். என். பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து, இவ்வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளித்துள்ளது.

அதில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கெடுத்து விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், உரிய கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேற்கோண்டு, தேர்தலை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!