சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
X

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மற்றும் கொறடா, தேர்வுக்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது.. கூட்டத்தில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், எம்எல்ஏக்கள் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டம் நடைபெறும் தினத்தன்று தலைமை அலுவலகத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், எம்எல்ஏக்களை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!