முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 98- வது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்கள் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மதுரை மாநகர் திமுக சார்பில் கொரோனா நிவாரணமாக ஏழை எளிய மக்கள் 1500 நபர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன் முத்துராமலிங்கம் உத்தரவின்பேரில், மதுரை மாநகர் மாவட்ட திமுக கழகத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மற்றும் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் நலத்திட்ட உதவிகள் வாங்கிச் சென்றனர் திமுக கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu