பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்.
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலை அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மக்கள் விரோத போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!