புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 40 நாளில் 21 முறை பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் அண்ணா சாலையில் உள்ள பெட்ரோல் பங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமி தலைமை வகித்திட வைத்திலிங்கம் எம்பி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் கொடியுடன் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதே போல் புதுச்சேரி முழுவதும் 30 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!