அதிமுக தலைமை கழக அறிவிப்பு

அதிமுக தலைமை கழக அறிவிப்பு
X

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் குறித்து அதிமுக தலைமை கழக அறிவிப்பு கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் குறித்து அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 14 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை உடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

14ஆம் தேதி அன்று தலைமை கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால் கொரோனா தொற்றின் காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு தலைமைகழக வளாகத்திற்குள் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி