நீங்க எந்த கேள்வி கேட்டாலும் என்கிட்ட பதில் இருக்கும் அதான் இந்த பிடிஆர்

நீங்க எந்த கேள்வி கேட்டாலும் என்கிட்ட பதில் இருக்கும் அதான் இந்த பிடிஆர்
X

தமிழக நிதியமைச்சர் தான் இப்ப டாக் ஆஃப் தி டெல்லி

நீங்க எந்த கேள்வி கேட்டாலும் என்கிட்ட பதில் இருக்கும் அதான் இந்த பிடிஆர்- கலக்கும் அமைச்சர் கலங்கும் இணைய பேராளிகள்

தமிழக நிதியமைச்சர் தான் இப்ப டாக் ஆஃப் தி டெல்லி . டெல்லி மட்டுமல்ல இந்தியாவே உற்று நோக்குதாம்...ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில நம்ம நிதியமைச்சர் பேசுன பேச்ச பார்த்து நார்த் இந்தியன் யூத்கள் இணையத்துல இவரது பேச்சை கேட்க ஆர்வமா தேடிக்கிட்டிருக்காங்கன்னா நீங்களே பாத்துக்கோங்க.

இது எதுக்குங்க கோவா மினிஸ்டரே கோவிச்சுண்டு சண்டை போட ஆரம்பிச்சுட்டாராம். மனுஷன் அது மடடுமில்லாம டிவிட்டர் பேஸ்புக்குல உள்ளூர் பா.ஜ.க-வினரை கமெண்ட்..ப்ளாக் என மனுசன் வதம் செய்து வருகிறாராம்.

ஏக் மார் தோ துக்கடா என (வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு) இருக்குதாம் பிடிஆர் மாஸ்.. அதுலயும் புள்ளி விவரங்களை பிங்கர் டிப்புல வெச்சுக்கிட்டு பேசுறதால கேள்வி கேக்குற பலபேர புறமுதுகு காட்டி ஓடவிடரார்.

அதல்லாம் விட பிடிஆர் பேசுற புள்ளிவிவரங்களை நோட்ஸ் எடுக்காம அந்த மனுஷன் போட்டு இருக்கிற மாஸ்க்-கை டார்க்கெட் பண்ணியிருக்காங்க இன்னும் சிலர். அதோட விட்டாக்கூட பரவாயில்ல. நேரா ட்விட்டர்ல அவரையே டேக் செய்து. பிடிஆர் சார்.. மாஸ்க் எங்க வாங்குறாருன்னு தெரிஞ்சா நாமலும் நாலு வாங்கி வைக்கலாம் கேட்டு இருக்காய்ங்க..


நீங்க எந்த கேள்வி கேட்டாலும் என்கிட்ட பதில் இருக்கும் அதான் இந்த பிடிஆர் என்கிற ரேஞ்சில்.. எல்லாமே ஹோம்மேட்(சொந்த தயாரிப்பு) தான்.. தி ஆர்ட்-ன்னு அவரு யூஸ் பண்ற மாஸ்க்-க்கும், தி ஆர்டிஸ்ட்-ன்னு அவருடைய மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் னா பார்த்துக்கேங்க. இதில் அவர் போட்ட இன்னொரு கேப்ஷனுக்கு ட்விட்டரில் ரெஸ்பான்ஸ் சும்மா அள்ளுது.


ஆல்ட்ரேஷன் என்று பதிவிட்டு கிழிந்த மாஸ்கையும் எடிட்டர்-ன்னு போட்டு அவர் வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மிகவும் பவ்யமாக நிற்கும் அவரது செல்லப்பிராணியின் போஸ்ட்-க்கு லைக்குகள் அள்ளுது. அதில் ஒருவர் செய்துள்ள கமெண்டில்." நீங்கள் போட்டிருக்கும் போஸ்ட்டில் உள்ள செல்லப்பிராணியை பார்த்ததும், எனக்கு இந்த கமெண்ட் தான் நியாபகத்து வருது... அடேய் பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதவனை போல முழிக்கிறதை பாரு" என்ற கவுண்டமணி நகைச்சுவை தான் நினைவில் எனப் பதிவிட்டுள்ளார். எது எப்படியோ திரும்பிய பக்கமெல்லாம் கோல் போடுறாரு பிடிஆர் அது போதும் இப்போதைண இணைய வழி போராளிகளுக்கு..

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!