கடையநல்லூரில் சி.ஏ.ஏ.விற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணையவழி போராட்டம் .

கடையநல்லூரில் சி.ஏ.ஏ.விற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணையவழி போராட்டம் .
X

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணையவழி போராட்டம் .

தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ.விற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணையவழி போராட்டம் .நடத்தியது

வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன

குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அகதிகளாக தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டி குடியுரிமை வழங்கப்படுவதை கண்டித்து வீட்டில் இருந்த படியே தமிழகம் முழுவதும் கண்டன பதாகைகளை ஏந்தி இணையவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ் .சுலைமான் முகநூல் வழியாக கண்டன உரையாற்றினார். கொரோணா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் தோல்வியை மறைக்க >))இந்த சட்டம் அவசரஅவசரமாக நடைமுறை ப்படுத்தப்படுகிறது. நோய் தொற்றால் கஷ்டப்படும் மக்களுக்கு தடுப்பூசி, ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது.

இரண்டாவது அலையை இந்தியாவில் பரவ மோடி அரசின் தவறான நடவடிக்கையே காரணம் இதை மூடி மறைக்கவே தற்போது சி ஏ ஏ சட்டத்தை பஞ்சாப், குஜராத், ஹரியானா, சத்திஸ்கர்,ராகஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைமுறைக்கு வருகிறது. மதத்தின் அடிப்படையில் மக்களிடம் பாகு பாடு காட்டுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.

மத்திய அரசின் தவறான அனுகுமுறையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதை வண்மையாக கண்டிப்பதாக அவர் கூறினார். தென்காசி மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்த படியே சி. ஏ. ஏக்கு எதிராக பதாகைகளை ஏந்தி இணைய தளம் வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story
2025 ஆம் ஆண்டில் ஏர்போட்ஸ் ப்ரோ 3வது தலைமுறைக்கான ஆப்பிள் அறிமுகப்படுத்துமா...? ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது....!