இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.
சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பின்னர், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தேவரின மக்கள் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அண்ணாத்துரை தலைமையில், பொதுச்செயலாளர் ரவிபாண்டியன், துணை பொதுச்செயலாளர் கருத்தப்பாண்டியன், முக்குலத்தோர் புலிப்படை மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முருகன், தேவர் மக்கள் ராஜ்ஜியம் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் நேற்று கோவில்பட்டி ஆர்.டி.ஓ., ஆபிஸிற்கு வந்தனர்.
பின்னர்,ஆர்.டி.ஓ.,சங்கரநாராயணனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது ; "தமிழ்நாடு சட்டம் எண்.8/2021 ரத்து செய்து, நியாயமாக சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பின்னர், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அமைக்கப்பட்டுள்ள நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை கலைத்துவிட்டு, பொது சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி தலைமையிலான ஆணையத்தை அமைக்க வேண்டும்.
கடந்த கால அ.தி.மு.க., அரசு அவசரத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டம் எண்.8/2021-ஐ ரத்து செய்து, முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu