பேரணியின் போது 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷமிட அனுமதி கோரிய காங்கிரஸ் எம்.எல்.ஏ

பேரணியின் போது பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட அனுமதி கோரிய காங்கிரஸ் எம்.எல்.ஏ
X

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மன் சவதி

கர்நாடகாவின் கலபுராகியில் நடந்த தேர்தல் பேரணியில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்குவதற்கு கார்கேவிடம் ஒப்புதல் கோரிய காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மன் சவதி

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஆண்டு காங்கிரஸில் சேர பாஜகவை விட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மன் சவதி பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிடுவதற்கு முன்பு மல்லிகார்ஜுன கார்கேவிடம் 'ஒப்புதல்' கேட்டதைத் தொடர்ந்து இந்த வாரம் சர்ச்சையில் சிக்கினார்.

கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மக்களவைத் தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவின் கலபுர்கி பகுதியில் நடந்த தேர்தல் பேரணியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

"கார்கே இதை தவறாக புரிந்து கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். இதை உங்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். நான் 'போலோ பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்வேன், நீங்கள் அனைவரும் அதை மீண்டும் சொல்ல வேண்டும்" என்று அதானி தொகுதி எம்.எல்.ஏ லக்ஷ்மண் சவதி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன


இந்த கருத்து பாஜக அணியில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா இது 'மிகவும் பரிதாபகரமான மற்றும் ஆபத்தான' நிகழ்வு என்று கூறினார்.

"ஒரு காங்கிரஸ் தலைவர் தனது தேசபக்தியை வெளிப்படுத்தவும், பாரத மாதாவை புகழ்ந்து பேசவும் முயற்சிக்கிறார், எனவே அவர்களின் தேசியத் தலைவரிடம் கோஷத்தை எழுப்பும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முயல்வது மிகவும் பரிதாபகரமானது மற்றும் ஆபத்தானது அல்லவா?" என்று விஜயேந்திரா கேள்வி எழுப்பினார்.

"பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை முழக்கமிட்டவர்கள் சார்பாக வாதிட்ட அமைச்சர் பிரியங்க் கார்கேவின் நடவடிக்கையைப் பார்த்த பிறகு எம்.எல்.ஏ லக்ஷ்மன் சவதி காங்கிரஸ் கட்சியின் உண்மையான சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டார். காங்கிரஸ் கட்சிக்குள் 'பாரத் மாதா கி ஜெய்' கோஷத்தை எழுப்ப அவர் மிகவும் பயந்தார், மல்லிகார்ஜுன கார்கேவிடம் அனுமதி கேட்டார்" என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா எக்ஸ் இல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

பாரத் மாதா கி ஜெய் கோஷம் முன்னதாக மார்ச் மாத பிற்பகுதியில் கேரகா முதல்வர் பினராயி விஜயன் ஒரு முஸ்லீம் உருவாக்கியதாகக் கூறியதை அடுத்து விவாதப் பொருளாக மாறியது. இந்த முழக்கம் 19 ஆம் நூற்றாண்டில் மராட்டிய பேஷ்வா நானா சாஹேப்பின் பிரதமரால் உருவாக்கப்பட்டது என்று பினராயி கூறினார். முஸ்லிம் ஒருவரால் உருவாக்கப்பட்டது என்பதால் சங்பரிவார் இப்போது அந்த முழக்கத்தை உச்சரிப்பதைத் தவிர்க்க முடிவு செய்யுமா என்றும் பினராயி விஜயன் கேள்வி எழுப்பினார்.

"இப்போது, சில நிகழ்ச்சிகளில் சில சங் பரிவார் தலைவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடுமாறு மக்களிடம் கேட்பதை நாம் கேட்கிறோம். பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அது யாரோ சங் பரிவார் தலைவரா? இது சங்பரிவாருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அவரது பெயர் அஜிமுல்லா கான்" என்று குடியுரிமை (திருத்த) சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிரான பேரணியின் போது அவர் கூறியிருந்தார்.

Tags

Next Story