நெல்லை- எஸ்டிபிஐ கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழா
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மக்கள் அரசியலின் 13 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு கொடி ஏற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது, தொகுதி செயலாளர் பாளை சிந்தா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் மின்னதுல்லா, தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் கல்வத், மாவட்ட தலைவர் சலீம் தீன், மாவட்ட செயலாளர் செய்யது, தொகுதி, பகுதி,வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் ஆற்றிய உரையில் புதிய அத்தியாயத்திற்கான துவக்க நாள்! இன்று ஜுன் 21,2009 - இந்தியாவின் நாலாபுறங்களிலும் மத இன பாகுபாட்டால், அரசியல் அதிகாரத்தில் புறக்கணிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலில் புதிய அத்தியாயத்திற்கான தொடக்கம் குறித்த நாள் என்றே சொல்ல வேண்டும். ஆம்! எஸ்.டி.பி.ஐ. கட்சி துவங்கப்பட்ட நாள் தான் அது. கட்சி தொடங்கப்பட்டு 12 ஆண்டு காலமும் நாட்டில் ஒடுக்கப்படும் நசுக்கப்படும் மக்களுக்காகவே நம்முடைய குரல் ஒலிக்கப்பட்டு வருகிறது. அதனாலேயே என்னவோ அதிகார வர்க்கங்களும், மாற்று சக்தியாக உருவாகி விடுவோமோ என்று அச்சப்படக்கூடியவர்களாலும் நாம் குறிவைக்கப்படுகின்றோம். அதுவே நம்முடைய கொள்கை உறுதிக்கான சாட்சி!
13ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் இன்னும் நம்முடைய கட்சியின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்று, நாட்டு மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். சமூகத்தில் நிலவி வரும் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். மக்கள் பணிகளில் தனித்துவத்தைக் கொண்டுள்ள நாம் அரசியல் அதிகாரத்திலும் இடம்பெற்று, மக்களுக்கான குரல்களை தீவிரப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு வீரியமாக பயணிப்போம்.
கொரோனாவுடைய காலத்தில் கட்சி துவக்க நாளை சந்திக்கும் நாம், கட்டுப்பாடோடும் முறையான பேணுதலோடும் மாநில தலைமை காட்டிய வழியில் கடைப்பிடிப்போம். இந்த ஆண்டு கட்சியின் துவக்கநாளை கொரோனாவால் வாழ்விழந்த, நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிப்போம் என தெரிவித்தார்.
இதே போன்று நெல்லை மாநகர் மாவட்டம் முழுவதும் மேலப்பாளையம் பகுதி, பாளை பகுதி, டவுண் பகுதி, பேட்டை பகுதி,சுத்தமல்லி பகுதி, மானூர் பகுதி, தாழையூத்து பகுதிகளில் கொடி ஏற்றம், நலத்திட்ட உதவிகள், மரக்கன்று நடுதல் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu