பொது வேலைநிறுத்தம்-தமிழகம் முழுவதும் பத்தாயிரம் பேருந்துகள் இயங்கவில்லை

பொது வேலைநிறுத்தம்-தமிழகம் முழுவதும் பத்தாயிரம் பேருந்துகள் இயங்கவில்லை
X

தருமபுரி பஸ் நிலையத்தில் பஸ் வசதி இன்றி பயணிகள் அவதி அடைந்தனர்.

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கையில் 32.76% சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் பேருந்துகள் இயங்கவில்லை

மொத்த பேருந்துகளின் எண்ணிக்கையில் 32.76% சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது




Next Story
ai solutions for small business